TheMadrasTimes
பிரதமர் நரேந்திர மோடியின் 19 வருட ஆட்சி அதிகாரமும் 50 வருட கடின உழைப்பும்!!! அரசியலில் ஆசான்-மோடி
Updated: Oct 11, 2020
| By Rudra. | Date : 08th October 2020 | Place : Chennai,Tamilnadu.

Photo : Shri Narendra Modi ,Prime Minister Of India
அரசியலில் ஆசான்-மோடி
பிரதான ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சொந்த கட்சித்தலைவர்கள் என ஒட்டுமொத்த சக்திமிக்க எதிர்ப்புகளுக்கு இடையில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்து இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக தன்னை உருவாக்கிக் கொண்ட மோடியின் கதை அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்று கூறினால் அது மிகையாகாது.
பிரதமர் மோடி இன்று இந்திய அரசியலில் தடையில்லாத 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். வேறு எந்த ஒரு நவீன இந்தியரும், உலகில் உள்ள மற்றும் பல பிரபலமான தலைவர்களும் கூட 20 ஆண்டுகள் சக்திவாய்ந்த கண்கவர் பதவியில் நீடித்திருக்கவில்லை. மோடியின் அரசியல் வாழ்க்கை குஜராத் கலவரத்தின் உச்சகட்டத்திலிருந்து ஒருபோதும் மீட்கப்படாது என்று பலர் நினைத்தார்கள்.
ஆனால் அவர் அந்த மோசமான அரசியல் தொடக்கத்தை தனது மிகப்பெரிய பலமாக மாற்றினார். சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தி, ஊழல் இல்லாத, உயரடுக்கு மற்றும் குடும்ப அரசியல் காங்கிரசுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சமரசமற்ற இந்து தேசியவாதியாக அவர் வெளிப்பட்டார்.பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையில் மோடியின் வளர்ச்சி மக்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை மட்டுமே முதலீடாகக் கொண்டது என்பது நிதர்சனமான உண்மை. ஒரு காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ஒருநபர் பின்னர் ஒரு நாளில் சுமார் 50,000 மக்கள் கூடியிருந்த ஒரு அரங்கத்தில் அமெரிக்க அதிபர் வரவேற்க பலத்த கரகோசங்களுக்கு இடையே மேடையில் தோன்றி உரை நிகழ்த்துவது எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே காண முடிகின்ற அரிய செயல். போற்றுபவர்கள் போற்றட்டும், தூற்றுபவர்கள் தூற்றட்டும். காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறது
"தி மெட்ராஸ் டைம்ஸ்".