top of page
  • Writer's pictureTheMadrasTimes

எல்பிஜி மானியங்களை அரசு வங்கி கணக்குகளில் செலுத்துவதன் மூலம் ஊழலைத் தடுக்க முடியுமா?

Updated: Oct 22, 2020

| By Rudra | Date : 12th October 2020 | Chennai,Tamilnadu. | Opinion


Photo : LPG cylinders | Place : Chennai - Tamilnadu

வங்கி கணக்குகளில் காஸ் மானியம்

நம்ம காச வாங்கி நமக்கே திருப்பி கொடுக்கறதுல எப்புடி ஊழலை ஒழிக்க முடியும்.? சிலிண்டர் வாங்கும்போது மானிய விலையை குறைத்துவிட்டு மீதி தொகைக்கு சிலிண்டர் கொடுத்து விட வேண்டியதுதானே? டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிட்டு ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுகின்றனர் என இப்படி சலிப்பான பேச்சுக்களை நிச்சயம் ஒரு முறையாவது நீங்கள் கேட்டிருப்பீர்கள் அல்லது நீங்களே பொலம்பி இருப்பீர்கள். இது போதாது என்று கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மானியத்தை மக்கள் வங்கி கணக்குகளில் சேர்க்கும் திட்டத்தை நீக்கிவிட்டு முந்தைய முறையே பின்பற்ற வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி வேறு அளித்தார்.


இவ்வாறு இந்த காஸ் மானியம் தொடர்பான புரிதலை அனைவரிடத்திலும் அரசோ, செய்தி நிறுவனங்களோ கொண்டு சேர்க்க தவறிவிட்டன என்பதே நிதர்சனம்.மானியம் வழங்குவதில் எந்த முறை சிறந்தது.? ஏன் அரசு டிஜிட்டல் இந்தியா என்று கூறி மானியத்தை வங்கி கணக்குகளில் செலுத்துகிறது.?


காஸ் மானிய முறைகேடு

முதலில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் சங்கிலியில் எந்த இடத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம். பொதுமக்களுக்கு வீட்டு உபயோகத்திற்காகவும்,கடைகள் உள்ளிட்ட வணிக ரீதியான(commercial) உபயோகத்திற்க்கும் தனி தனியாக காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.இதில் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் குறைந்த விலைக்கும், வணிக ரீதியான சிலிண்டர்கள் சற்று அதிக விலைக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் வீட்டு சிலிண்டர்களை வணிக ரீதியான உபயோகத்திற்கு கைமாற்றி விற்பனை செய்வதன் மூலம் பெருமளவு அரசின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.


உதாரணத்திற்கு மானியத்தை முன்கூட்டியே குறைத்து வழங்கும் முறையில் ஒரு சிலிண்டருக்கு 600 ரூபாய் விலை என வைத்து கொள்வோம்.அரசு 150 ரூபாய் மானியத்தை காஸ் நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு சிலிண்டருக்கு 450 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யும். சமையல் எரிவாயு நிறுவனம் அரசிடம் மானிய தொகையை பெற்றுக்கொண்டு மக்களுக்கு விநியோகம் செய்ய சிலிண்டர் விலையை குறைத்து வெளியில் அனுப்பும்.


450₹க்கு கிடைக்கும் வீட்டு உபயோக சிலிண்டர்களை சற்று விலை கூட்டி ஒரு 800₹ என்ற அளவில் வணிக ரீதியாக உபயோக படுத்துவர்களிடத்தில் விற்பனை செய்யும் பொழுது (450₹ + 150₹ + 200₹ = 800₹)அரசிற்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி மானியமாக(150₹) அரசு வழங்கும் மக்களின் வரிப்பணம் சட்டவிரோதமாக செயல்படுபவர்களின் சுருக்கு பைகளுக்கு சென்று சேர்ந்து விடுகிறது.

இந்த காஸ் மானியம் தொடர்பான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் மக்களுக்கு சரிசமமான பங்கு இருக்கின்றது. அரசின் DBTL(Direct benefit Transfer)முறைப்படி மானிய தொகையை மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்துவதால் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் சிலிண்டர்களுக்கு (600₹+200₹=800₹) மானியத் தொகை(₹150) சென்று

சேராது. ஒரு சிலிண்டருக்கு 600₹ கொடுத்தே வாங்க நேரிடும்.


வீட்டு உபயோகத்திற்கு அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை வணிக ரீதியாக கள்ள சந்தையில் விற்பனை செய்வது குற்றம் என்று மக்கள் உணர வேண்டும்.

மேலும் வீட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் போது மானியம் பெறாமல் காஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தக்கூடிய அளவிற்கு வசதி படைத்த மக்களுக்கும் மானியம் சென்று சேர்கிறது. இதன் தொடர்ச்சியாக வசதி படைத்தவர்கள் தானாக முன்வந்து மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என அரசால் வேண்டுகோள் வைக்கப்பட்டது.இதன் மூலம் கணிசமான மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.


மக்களின் பங்கு

மானியம் சரிவர வங்கி கணக்குகளில் வந்து சேரவில்லை என குற்றம் சாட்டி இந்த முறையை நீக்க நினைக்காதீர்கள்.அது கொள்ளைகாரர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியாய் மாறிவிடும். சிரமம் பார்க்காமல் படித்த இளைஞர்கள் உதவியுடன் மானியத்தை பெற ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று மனதில் மட்டும் நினைக்காமல் ஊழலை ஒழிக்க அரசிற்கு நாம் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமாகும்.மக்களிடத்தில் இதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது படித்த சமுதாயத்தின் முக்கியகடமையாகும். தவறினால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அந்த காங்கிரஸ் அரசியல் புள்ளி போல ஊழலை ஒழிக்கும் முறையை ஒழிப்பதற்கு மக்கள் இடமே வாக்கு கேட்க்கும் முறை தொடரும். "தி மெட்ராஸ் டைம்ஸ்" பார்வையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட DBTL(Direct Beneficiary Transfer) முறை ஒரு வரப்பிரசாதம்.

Comments


bottom of page