top of page
  • Writer's pictureTheMadrasTimes

#BoycottTanishq ட்ரெண்டிற்கு பிறகு விளம்பரத்தை திரும்ப பெற்றது ஜூவல்லரி பிராண்ட் தனிஷ்க்.

| Rudra | Date :14th October 2020 | Chennai,Tamilnadu.

PIC : Tanishq withdraws ad on interfaith family after #BoycottTanishq trends.

புதுடெல்லி: 'லவ் ஜிஹாத்' மற்றும் 'போலி மதச்சார்பின்மை' ஆகியவற்றை

தனிஷ்க் நிறுவனம் ஊக்குவிப்பதாக பலர் குற்றம் சாட்டியதால், சமூக ஊடகங்களில் கடும் பின்னடைவைச் சந்தித்தது தனிஷ்க், இதனால் விளம்பரத்தை ஜூவல்லரி பிராண்ட் தனிஷ்க் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.

யூடியூபில் உள்ள வீடியோவின் விளக்கம் பின்வருமாறு: "அவர் தனது சொந்த குழந்தையைப் போலவே அவளை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே, அவர்கள் வழக்கமாக செய்யாத ஒரு விழாவை கொண்டாடுகின்றனர். இருவரின் அழகான சங்கமம் வெவ்வேறு மதங்கள், மரபுகள், கலாச்சாரங்கள் என கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதை போல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது "விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும், டாடா தயாரிப்பான பிராண்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்ய்ய்யப்பட்டது.
தனீஷ்க் முதலில் யூடியூப்பில் அதன் விளம்பரத்தில் கருத்துகள் மற்றும் விருப்பு வெறுப்புகளை முடக்கியது, செவ்வாயன்று வீடியோவை முழுவதுமாக வாபஸ் பெற்றது. விளம்பரத்தை கைவிட எந்த காரணமும் கூறப்படவில்லை. செய்தி நிறுவனங்களின் பதிலுக்கு தனிஷ்க் இதுவரை பதிலளிக்கவில்லை அல்லது அறிக்கை ஒன்றை வெளியிடவில்லை.
இந்த விளம்பரத்தை நீக்கியது காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், எழுத்தாளர் சேதன் பகத் மற்றும் நடிகர் ஸ்வாரா பாஸ்கர் உள்ளிட்ட பலருடன் ட்விட்டரில் புதிய விவாதத்திற்கு வழிவகுத்தது.
71 views0 comments

Comments


bottom of page